
பிரேசிலின் லெப்டோஃபிஸ் மிஸ்டாசினஸ் (Leptophis mystacinus) என்ற பாம்பு இனத்தின் ஆச்சரிய பண்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மூக்கில் மீசை போன்ற கருப்பு கோடு இருக்கும் இந்தப் பாம்பு, தனித்துவமான தோற்றத்தால் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டியாகோ சான்டனா தலைமையிலான ஆராய்ச்சிக் குழு, உருவம் மற்றும் டி.என்.ஏ ஆய்வுகள் மூலம் இதை புதிய இனமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் பாம்பின் தனித்துவமான அம்சங்கள்
34 அங்குல நீளமுள்ள இந்த மெல்லிய பச்சைப் பாம்பு, பிரேசிலிய அருங்காட்சியகத்தில் பல ஆண்டுகளாகக் கவனிக்கப்படாமல் இருந்துள்ளது.
இதன் மிக முக்கிய அடையாளம், மூக்கில் உள்ள மீசை போன்ற கருப்பு கோடு தான். இது மற்ற பாம்பு இனங்களில் இல்லை என்றும் கண்களுக்குப் பின்னால் நீண்ட கருப்பு கோடு, உடலில் பச்சை பக்கவாட்டு கோடுகள் மற்றும் முதுகில் வெளிர் மஞ்சள் கோடு ஆகியவை இதன் தோற்றத்தை மேலும் தனித்துவமாக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.
செதில் அமைப்பு மற்றும் பற்களின் எண்ணிக்கை போன்ற உருவப் பண்புகளும், டிஎன்ஏ மூலம் கண்டறியப்பட்ட மரபணு வேறுபாடுகளும் இதை புதிய இனமாக உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆய்வு குறித்த தகவல்கள் PeerJ இதழில் வெளியிடப்பட்டது.
ஆரம்பத்தில் இது ஏற்கனவே அறியப்பட்ட இனமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்பட்டாலும், டி.என்.ஏ ஆய்வு மூலம் இது புதிய இனமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!