
ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு (75) தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக அக்கட்சியின் தொண்டர்களால் ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு, முதன்முதலாக 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆந்திர மாநில முதல்வராகப் பதவியேற்று இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த மூன்று தசாப்தங்களில், அவர் மூன்று முறை ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
இதையொட்டி அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியிருந்த சந்திரபாபு நாயுடு, “நான் என்றைக்காவது விடுப்பு எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா, உடம்பு சரியில்லாமல் ஓய்வெடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? மக்களுக்காகக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் வருவாயை அதிகரிக்கவும் இயந்திரத்தைப் போல ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
சந்திரபாபு நாயுடுவின் மனைவியான புவவேஷ்வரி, “பக்தியுடனும், மக்கள் நலனுடனும் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது. நீங்கள் எடுத்துள்ள ஒவ்வொரு அடியும், எடுத்த ஒவ்வொரு முடிவும் மக்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டிற்குச் சான்றாகும்.

இந்த அரிய மைல்கல்லை எட்டியதற்கு நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன். உங்கள் தொலைநோக்கு பார்வையுடனும், உறுதியுடனும் எப்போதும் உங்களுடன் நிற்பது எனது அதிர்ஷ்டம்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs