
சென்னை: பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை நான் எப்படி தடுக்க முடியும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் ‘கூலி’ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “படம் குறித்து எதையும் நான் சொல்லவில்லை. ஆனால் படம் குறித்த பார்வையாளர்களின் உற்சாகம்தான் என்னை இங்கே உட்கார வைத்திருக்கிறது. இந்த உற்சாகம் இல்லையென்றால் நாங்கள் படம் எடுக்க முடியாது. அதை குறை சொல்லவும் முடியாது. உதாரணமாக, ‘கூலி’ எல்சியூ என்றோ, டைம் டிராவல் படம் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் பார்வையாளர்களே அப்படி நினைத்துவிட்டார்கள். நான் கடைசி நேரம் வரை ஒரு ட்ரெய்லர் கூட ரிலீஸ் செய்யவில்லை.