
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சத்யஜோதி டிஜி தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சங்கத்தின் தலைவராக பாரதி ராஜா பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், 2025-28-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் தலைவராக தியாகராஜன், துணைத் தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, லலித் குமார், பொதுச்செயலாளராக அம்மா கிரியேஷன் டி.சிவா, பொருளாளராக தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.