• September 2, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜெர்​மனி​யின் கொலோன் நகரில் பழம்​பெருமை வாய்ந்த கொலோன் பல்​கலைக்​கழகம் உள்​ளது. இதில் கலை மற்றும் சமூக​வியல் கல்​விப் புலத்​தின் கீழ் இந்​தி​ய​வியல் மற்​றும் தமிழ்க் கல்​விப் பிரிவு கடந்த 1963 முதல் செயல்​பட்டு வந்​தது. இத்துறை நிதிப் பற்​றாக்​குறை​யால் கடந்த வருடம் அக்​டோபர் 30-ம் தேதி​யுடன் மூடப்​பட்​டது. இதற்கு முன்​பும் இந்த தமிழ்ப் பிரிவு, 2 முறை மூடப்​படும் நிலைக்கு தள்​ளப்​பட்​டது.

கடைசி​யாக கடந்த 2021 ஜுலை​யில் கிடைத்த நிதி​யால் மூடப்​படும் நிலை​யி​லிருந்து தப்​பியது. இந்த நிதி, தமிழ்​நாடு அரசின் ரூ.1.25 கோடி, அமெரிக்​க​வாழ் இந்​தி​யர்​களின் ரூ.1.5 கோடி, ஐரோப்​பிய தமிழர் கூட்​டமைப்​பின் ரூ. 23 லட்​சம் ஆகியவை மூலம் அளிக்​கப்​பட்​டது. தமிழக அரசின் கவனத்தை ‘இந்து தமிழ் திசை’ செய்தி ஈர்த்​த​தால் நிதி​யுதவி அளிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *