• September 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு 2 நாள் பயண​மாக இன்று தமிழகம் வரு​கிறார். இதையொட்​டி, பாது​காப்பு பலப்படுத்​தப்​பட்​டுள்​ளது. குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, கர்​நாடக மாநிலம் மைசூரு​வில் இருந்து இந்​திய விமானப்படையின் தனி விமானத்​தில் இன்று காலை 10.30 மணிக்கு புறப்​பட்​டு, பகல் 11.40 மணிக்கு சென்னை பழைய விமான நிலை​யம் வரு​கிறார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்​கப்​படு​கிறது.

பின்​னர், அங்​கிருந்து காரில் புறப்​பட்டு பகல் 12.10 மணிக்கு சென்னை நந்​தம்​பாக்​கம் வர்த்தக மையம் செல்​கிறார். அங்கு நடை​பெறும் சிட்டி யூனியன் வங்​கி​யின் 120-வது நிறுவன தின விழா​வில் பங்​கேற்று உரை​யாற்​றுகிறார். பகல் 1.20 மணிக்கு அங்​கிருந்து காரில் புறப்​பட்டு 1.35 மணிக்கு சென்னை கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கைக்கு சென்று ஓய்வு எடுக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *