
மதுரை: திருச்சி துறையூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேன் மற்றும் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் அதிமுகவினர் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரில் ஆகஸ்ட் 24-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், ஆம்புலன்ஸ் ஒட்டுநர் தாக்கப்பட்டார். இந்தs சம்பவம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.