
எப்போதும் உங்களைக் காக்கும் சுதர்சன ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது இதில் கலந்து கொள்ள வேண்டும் ஏன்! 8 காரணங்களை சொல்லி உங்கள் நல்வாழ்வுக்கு வழிகாட்டுகிறது ஆன்மிகம்! 2025 செப்டம்பர் 17 வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயத்தில் நடைபெறுகிறது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
ஆயிரம் கரங்களுடன், அழகிய சிவந்த கண்கள் கொண்டவரும், ஆயிரம் சூரிய ஜுவாலையை தலையைச் சுற்றி மணிகள் போல் அணிந்தவரும், பஞ்சபூதங்களின் ஆற்றலைப் பெற்றவரும், நினைத்த மாத்திரத்தில் வரக் கூடியவரும், தமது பக்தர்களை அச்சுறுத்தும் தீமைகளை அகற்றுபவருமான, சூரிய- சந்திரன்- அக்னி சக்தி கொண்டவரும், எப்போதும் சௌக்கியம் தருபவருமான ஸ்ரீசுதர்சனரை வணங்கினால் எப்போதுமே அச்சமும் கவலையும் கொள்ளத் தேவையில்லை.
ஞானம், தைரியம், வீரியம், பலம், ஐஸ்வர்யம் அருள்பவரும், மந்திரங்களில் அரசன் போல் விளங்கும் சுதர்சன மந்திரத்தின் தலைவருமான, சத்தியத்தைக் காப்பவரும், திருமால் பக்தியைப் போற்றுபவருமான ரிஷி நாராயணனை, திருமாலின் நிழல் போன்றவரை வணங்குகிறேன். ஸ்ரீசுதர்சனரின் தேஜோ ரூபத்தை வணங்கினால் தீமைகள் யாவும் கருடனை கண்ட நாகம் போல விலகிவிடும் என்பது நம்பிக்கை. மகிமைகள் பல கொண்ட ஸ்ரீசுதர்சனை வணங்கி, அவரின் பேரருளைப் பெற ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீசுதர்சன ஹோமத்தில் கலந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.
ஆலயங்களில் மட்டுமே செய்ய வேண்டிய ஹோமங்களில் ஸ்ரீசுதர்சன ஹோமமும் ஒன்று. மிகுந்த உக்கிரம் மிகுந்த இந்த வேள்வியால் நன்மைகள் ஓங்கி, தீமைகள் அழியும். பெருகி வரும் இந்த போட்டி பொறாமைகள் நிறைந்த உலகில் எல்லோரையுமே வாட்டி வதைத்து வருபவை திருஷ்டி; எதிர்மறை எண்ணங்கள் போன்றவை. இதில் இருந்து நம்மை காத்துக் கொள்ள ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீசுதர்சன ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்கின்றன ஞான நூல்கள்! அது ஏன்?

இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் 8 நன்மைகள்!
தீர்க்க ஆயுசு கிடைக்கும், நினைத்தது நிறைவேறும், கொடும் நோய்கள் அகல சுதர்சன ஹோமம் அருள் செய்யும்.
கடன் விலகி வியாபாரம்-தொழில் அபிவிருத்தி அடையும். சேமிப்பு உயரும். அஷ்ட ஐஸ்வர்யம் பெருகும். நிலம் வீடு அமையும்.
சத்ரு உள்ளிட்ட சகல பயமும் நீங்கும்: எதிரிகளின் சூழ்சிகள், சதித் திட்டங்கள் போன்றவையில் இருந்து இந்த ஹோமம் காக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீடு, அலுவலக பிரச்னைகள் நீங்கும்.
ஆபத்துகளிலிருந்து காக்கும். விபத்து, தாக்குதல் போன்ற சூழலில் நம்முடன் இருந்து இந்த ஹோமத்தின் பலன் நம்மை காக்கும்.
தீவினைகள் நீங்க, தீய சக்திகள் விலக, கெட்ட பாதிப்புகள் நம்மை அணுகவிடாமல் காக்கும் வல்லமை கொண்டது ஸ்ரீசுதர்சன ஹோமம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
இந்த ஹோமத்தால் எளிதில் கிரஹிக்கும் ஆற்றல் கிடைக்கும். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாவார்கள்.

துஷ்ட சக்திகள் குறித்த பயம் விலகும். மனக்கவலை நீங்கும். பாவங்கள்-தோஷங்கள் அடியோடு விலகும்.
சகலவிதமான ஜோதிடக் குறைகள் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
சிறப்பு மிக்க ஸ்ரீசுதர்சன ஹோமம் வரும் 2025 செப்டம்பர் 17 புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் நடைபெற உள்ளது. காரியத் தடைகளைத் தகர்த்து உங்கள் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்கும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு 48 நாள்களில் தீர்வு பெறுங்கள்!
சாந்நித்யம் மிக்க இந்த பிருந்தாவனத்தில் சக்தி விகடன் வாசகர்களின் நலனுக்காக இந்த சுதர்ஸன ஹோமம் நடைபெற உள்ளது. கலந்து கொண்டு பலன் பெறுங்கள்!

ஸ்ரீராகவேந்திரரின் பக்தரான T.N.சுந்தரராஜ ராவ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு உருவான இந்த பிருந்தாவனத்துக்கு வந்தவர்கள் பெற்ற பலன்கள் அநேகம். அவரது வழியையொட்டி தற்போது அவரது குமாரர் B.S. கோபிநாதன் அவர்களின் இந்த பிருந்தாவனத்தை நிர்வகித்து வருகிறார். லோகத்தின் க்ஷேமத்துக்காகவே இங்கு அன்றாடம் பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. சாந்நித்யம் மிக்க இந்த பிருந்தாவனத்தில் சக்தி விகடன் வாசகர்களின் நலனுக்காக இந்த சுதர்ஸன ஹோமம் நடைபெற உள்ளது. கலந்து கொண்டு பலன் பெறுங்கள்!
QR CODE FOR SUDHARSANA HOMAM

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு சிறப்பு ரட்சை , அட்சதை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07