
”கணவருடன் ஐந்து வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி” என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தொங்கவிட்டு சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் கவனம் பெற்றுவருகிறார்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹாங்ஷானைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடியிருப்பு வளாகத்தில் சிறந்த தோழி ஷி என்ற குறிப்பிட்டு ஒரு பதாகை வைத்துள்ளார்.
அதாவது 12 ஆண்டுகளாக தன்னுடன் தோழியாக இருந்தவர், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தனது கணவருக்குப் பாலியல் சேவை செய்ததாகவும், இந்தத் துரோகத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் அந்தக் குடியிருப்பு பகுதியில் இது போன்ற பதாகைகளை அப்பெண் வைத்ததாகவும் சவுத் மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஹாங்ஷான் சமூகத்தில் உள்ள சுற்றுலா மேலாண்மை அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர் சீன ஊடகமான தி பேப்பருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தப் பதாகை இணையத்தில் வைரலாகி வருவதுடன் பலரும் இதற்குப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சம்மந்தப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டதால், அந்தச் சிறந்த தோழி சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று சீன வழக்கறிஞர் ஜாவோ லியாங்ஷான் கூறியிருக்கிறார்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!