
பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலமான தனியார்ப் பள்ளியின் கல்விக் கட்டணம் (fee structure) அடங்கிய ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்ட பதிவில், வெறும் பள்ளிக்கான கட்டணம் மட்டும் அதில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதன்படி 1-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 7.35 லட்சம், 11-12-ம் வகுப்புகளுக்கு ரூ. 11 லட்சம் வரை கட்டணம் பெறப்படுகிறது.
போக்குவரத்து, புத்தகங்கள், சீருடைகள் அல்லது extracurricular activities போன்ற கூடுதல் செலவுகளையும் அதில் சேர்த்தல் ஒரு குழந்தைக்கான ஆண்டுச் செலவு ரூ. 8 லட்சத்தைத் தாண்டுகிறது.
அந்தக் குறிப்பிட்ட தனியார்ப் பள்ளியின் ஸ்கிரீன் ஷாட்டை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிதி ஆலோசகர் டி.முத்துகிருஷ்ணன், “இது ஒரு திறந்த சந்தை (free market). விலை நிர்ணயம் செய்வது தனிநபர்களின் கையில் இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்வது அவர்களின் விருப்பம். பெரும்பாலான கோட்பாடுகளைப் போலவே, இந்தக் கோட்பாட்டிலும் எல்லாம் சரியாகவே உள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு நல்ல பள்ளியின் கட்டண அமைப்பைப் பாருங்கள்.
ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் வருமானம் ஈட்டும் ஒரு ஐடி தம்பதியால் கூட, இரண்டு குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால், இந்தக் கட்டணத்தைச் சமாளிக்க முடியாது. இந்தியா முரண்பாடுகளின் நாடு” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சமுக ஊடகப் பயனர் ஒருவர், “ஐடி ஊழியர்களுக்கு 50 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது. ஆசிரியர்களுக்கும் பள்ளியின் பிற ஊழியர்களுக்கும் இப்படி சம்பளம் வழங்கப்படுகிறதா?
ஏன் அப்படி வழங்கப்படுவதில்லை? பெரும்பாலான பணம் நிர்வாகத்திற்கே செல்கிறது.
It's a free market. Pricing is upto individuals. It's customer choice to pick what they want. All is right in this theory, like most of the theories.
Look at the fee structure of one of the good schools in Bengaluru. This is unaffordable even for an IT couple earning a combined… pic.twitter.com/1AvDEQRMyz
— D.Muthukrishnan (@dmuthuk) August 31, 2025
இரண்டு ஆண்டுகளுக்கு எல்லோரும் தனியார்ப் பள்ளிகளில் சேர்க்கையை நிறுத்திவிட்டு, தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பினால், தனியார்ப் பள்ளிகள் தானாகவே பேய் வீடுகளாகிவிடும்.
ஆனால் மக்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் மக்களே ஊழல் நிறைந்தவர்கள்தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.