
கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவில் உள்ள நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான கோழி நீல நிறத்தில் முட்டையிடுவதாக கூறும் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
பொதுவாக கோழியின் முட்டை வெள்ளை நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு கோழி நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. அதனை காண மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வியாபாரிடமிருந்து இந்த கோழியை நூறு என்பவர் வாங்கியிருக்கிறார். எப்போதும் போல எல்லா கோழிகளுக்கும் கொடுக்கும் இரையையே இந்த கோழிக்கும் வைத்துள்ளார். ஆனால் இந்த முறை அதன் முட்டை நீல நிறத்தில் இருந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில் “எனக்கு 10 கோழிகள் உள்ளன. நான் அவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான உணவையே வைக்கிறேன்.
அவை வெள்ளை அல்லது மஞ்சள் நிற முட்டைகளை இடுகின்றன. ஆனால் இந்த முறை நீல நிற முட்டை கிடைத்துள்ளது. இதுவே முதன்முறை” என்கிறார் நூர்.
கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள் துறையின் உதவி இயக்குனர் டாக்டர் அசோக் கூறுகையில், நான் பச்சை- மஞ்சள் நிற முட்டைகள் இடுவதை பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த கோழி நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. இது என்னை ஆச்சரியப்படுத்தி உள்ளது. கோழிகள் அரிதாகவே இது போன்ற முட்டைகளை இடுகின்றன கோழியின் கணையத்தில் உள்ள பிலிவர்டின் என்ற நிறமி இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
பிலிவர்டின் என்ற நிறமி மாறும்போது முட்டையின் வெளிப்புற அடுக்கு நீல நிறமாக மாறக்கூடும் அல்லது சில நேரங்களில் மரபணு பிரச்சனையால் கூட இது போன்ற நிறங்கள் மாறக்கூடும் என்று உள்ளூர் கால்நடை மருத்துவர் ரகு நாயக் கூறியிருக்கிறார்.
நீல நிறத்தில் முட்டையிட்டுள்ள கோழியுடன் இருக்கும் புகைப்படத்தை நூர் பகிர்ந்ததை அடுத்து பலரும் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!