
புதுடெல்லி: செப்.1-க்குப் பிறகும் பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமை கோரலாம், ஆட்சேபம் தெரிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், ஆட்சேபம் தெரிவிக்கவும் செப்.1-ம் தேதி கடைசிநாள் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.