
சென்னை: திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனியின் கொலோன் நகரில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு – ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் பேசிய அவர், “ பல்லாயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து, வேறொரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கின்றபோது ஏற்படுகின்ற இந்த மகிழ்ச்சிதான், உண்மையான தமிழ்ப் பாசம். தமிழினப் பாசம் இது.