
கோவை: டிஜிபி நியமனத்தில் திமுக அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜனப் பொதுக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026-ம் ஆண்டு ஓய்வுபெறப் போகிறார். அதனால் பிரிவுபச்சார விழாவாக ஜெர்மனி, லண்டனுக்கு சென்றுள்ளார். ஆட்சிக்கு வந்தால் இந்து கோயில்களை புனரமைக்க ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என்றனர். நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 155 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.