
நேற்று ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிற்கு அருகே இருக்கும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில், 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11.47 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை லட்சக்கணக்கான மக்கள் உணர்ந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கிற நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்படைந்திருக்கலாம் என்று அமெரிக்கப் புவியியல் மையம் மதிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மாகாணத்தின் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் அஜ்மல் தர்வைஷ், “இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
ஆனால், பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அதனால், இன்னும் உயிரிழப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…