
புதுடெல்லி: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் 379 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.
கடந்தாண்டு இறுதிவரை உள்ள மொத்த வழக்குகளில் 1,506 வழக்குகள் 3 ஆண்டுகளாகவும், 791 வழக்குகள் 3 முதல் 5 ஆண்டுகளாகவும், 2,115 வழக்குகள் 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகளாகவும், 2,660 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் நிலுவையில் உள்ளன.