
புதுடெல்லி: டெல்லி – என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களால் பலர் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் தெருநாய் கடியில் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, ‘‘டெல்லி – என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் பராமரிக்க வேண்டும். அவற்றை மீண்டும் தெருக்களில் விடக்கூடாது’’ என்று கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி உத்தரவிட்டது.