
ஜம்மு: ஜம்முவில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு போக்குவரத்துக்கு உயிர்நாடியான தாவி பாலம் எண் 4-ன் கிழக்குப் பகுதியை கடுமையாக சேதப்படுத்தியது. இதனை பழுதுபார்ப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால், 110 அடி பெய்லி (தற்காலிக) பாலத்தை ராணுவத்தின் புலிகள் பிரிவின் பொறியாளர்கள் சவாலான சூழ்நிலையில் 12 மணி நேரத்தில் அமைத்தனர்.
ஆகஸ்ட் 26 முதல் ராணுவத்தின் ரைசிங் ஸ்டார் குழுவினர் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் உதவியுடன் பாதகமான வானிலை நிலவரங்களில் இருந்து குழந்தைகள், பெண்கள் என பலரை மீட்டனர். சுமார் 1,000 பேர் அபாயத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.