• August 31, 2025
  • NewsEditor
  • 0

சென்னையைச் சேர்ந்த ஜேடன் இம்மானுவேல் என்ற 13 வயது சிறுவன் FIM மினி ஜிபி மோட்டார் பைக் பந்தயத்தில் மூன்றாவது இடம் வென்றதைத் தொடர்ந்து, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், உலக அளவிலான பந்தயத்தில் கலந்துகொள்ளப்போகும் அவரை வாழ்த்தியிருக்கிறார்.

சென்னையில் பிறந்த ஜேடன் பெற்றோருடன் ஜெர்மனியில் வசித்து வருகிறார். சிறு வயதிலேயே சைக்கிள் ஓட்டுவது, சைக்கிள் ரேஸில் ஈடுபாட்டுடன் இருந்த இவருக்கு மோட்டார் பைக் ரேஸிங்கை அறிமுகப்படுத்தியுள்ளார் அவரது தந்தை.

Jaden Immanuel
Jaden Immanuel
Jaden Immanuel
அஜித்துடன் ஜேடன்

மோட்டார் பைக் ரேஸ்களில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய ஜேடன், 10 வயது முதல் FIM MiniGP ஜெர்மனி பந்தயத்தில் பங்கேற்றுவருகிறார். பல்வேறு போட்டிகளில் வென்றிருக்கிறார்.

FIM MiniGP என்பது MotoGP-ல் பங்கேற்க விரும்பும் இளம் வீரர்களுக்கான களம். இதில் 160 cc பிரிவில் 10-14 வயதினரும், 190cc பிரிவில் 12-16 வயதினரும் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறும். ஜேடன் 190cc பிரிவில் சாதித்து வருகிறார்.

வெளிநாடுகளில் நடக்கும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கு இளம் இந்திய வீரரான ஜேடன், பல்வேறு அமைப்புகள், க்ளப்கள், ஸ்பான்ஸர்ஷிப் மூலம் உலகத்தர பயிற்சிகள் பெற்றுவரும் சர்வதேச வீரர்களை பின்னக்குத்தள்ளி 2025 FIM MiniGP ஜெர்மனி ரேஸில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

Jaden Immanuel
Jaden Immanuel
Jaden Immanuel

ஒவ்வொரு சீசனிலும் இதுபோன்ற MiniGP பந்தயங்களில் முதல் மூன்று இடம் பிடிக்கும் வீரர்கள், சீசனின் இறுதியில் நடக்கும் உலக அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவர்.

அந்த வகையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த ஆண்டு ஸ்பெயினில் நடக்கவிருக்கும் போட்டியில் களமிறங்குகிறார் ஜேடன். அதற்கு அஜித் குமாரின் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார்.

13 வயது சிறுவனான ஜேடன் இந்த வெற்றிக்காக பலமுறை சர்கியூட்டில் சருக்கியிருக்கிறார். இந்தியாவை முன்னிறுத்தி பைக் ஓட்டி வெல்ல வேண்டும் என்ற ஆசையும், பெற்றோரின் ஆதரவும் ஒவ்வொருமுறையும் அவரை மீண்டும் எழ வைக்கிறது. சீறிப்பாயும் சிறுவன் ஸ்பெயினில் வெற்றிபெற வாழ்த்துகள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *