
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொன்னதை இந்தியா கூட்டணி முறியடித்து இழுபறி நிலையில் ஆட்சி அமைத்ததே பெரிய மாற்றமாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தமிழக முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (31.08.2025) சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடம், ராஜாஜி நகரில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், சூளை அங்காளம்மன் திருக்கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திடவும், குடமுழுக்கிற்கு வருகை தரும் பக்தர்கள் எளிதாகவும், விரைவாகவும் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.