
சமீபத்தில் நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் துவக்க விழாவை சென்னையில் நடத்தினார். அதில் நிகழ்ச்சித் தொகுப்பாள பாவனா, மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசி விளையாடலாம்னு ஆரம்பிச்சு, யோகி பாபுவிடம், “எங்க இருந்தீங்க நீங்க, உங்கள நான் பார்க்கவே இல்லையே” எனச்சொல்லியபடி உங்கள் மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுது என கேட்டார்.
அதற்கு யோகிபாபு, “என்னை வச்சு ரவி சார் படம் பண்றாரு, அந்த படம் நல்லா வரணும். அவரது தயாரிப்பு நிறுவனமும் நல்லபடியா வளரணும் என யோகிபாபு கூறினார். உடனே பாவனா, “நல்லவரு மாதிரி பேசுறீங்க” என்று பேச்சுகள் நீண்டது.
என்ன மாதிரியான மனநிலை இது???
Can she do this to any other artist..??
Very cheap #Bhavana
#brocode #RaviMohanStudios pic.twitter.com/iv2ouPiBfY— iPraVyn (@iPraVyn) August 29, 2025
“ஆமா நீங்கள் ரொம்ப நல்லவருதான்” என சொல்ல, அதற்கு யோகிபாபு, “அத ஏன் கொஞ்சம் சிரிச்சிகிட்டு சொல்லலாமே, குழாயடி சண்டை போடுற மாதிரி பேசுற” என பதிலடிக் கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பலரும் தொகுப்பாளர் பாவனா, யோகி பாபுவிடம் நக்கலாகப் பேசுகிறார் என்று விமர்சித்திற்குள்ளானது.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் புகைந்துகொண்டிருந்த இப்பிரச்னைக்கு பதிலளிக்கும் விதமான பாவானா, தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில், “மக்களே எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. ஜாலியாக பேசிக் கொண்டதை பலரும் தவறான கோணத்தில் பார்த்து அதை பகிர்ந்து வைரலாக்கி சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்கள்.
வெறும் 30 நொடி வீடியோவை பார்த்துவிட்டு பலரும் பல கதைகளை வெறுப்புகளால் சர்ச்சைகளை உருவாக்கி, ஒட்டுமொத்த மரியாதையும் சீர்குழைக்கப் பார்க்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் நாங்கள் ஜாலியாகதான் பேசினோம். அதை புரிந்து கொள்ளாமல் சிலர் வெறுப்பை பரப்புகிறார்கள்.
இப்படியான வெறுப்பான, போலியான தகவல்களை பரப்புவதை உஷாராக இருந்து தவிர்த்துவிடுங்கள். இதுபோன்றவர்களிடம் ஜாக்கிரதையாக தள்ளியே இருங்கள், எதையும் உடனே நம்பிவிடாதீர்கள். மீம்ஸ், ட்ரோல்ஸ் என்ற பெயரில் தவறான தகவல்களை வெறுப்பைப் பரப்புகிறார்கள். வாழு வாழ விடு” என்று பதிவிட்டிருக்கிறார். இது சமூவகலைதளங்களில் வைரலாகி வருகிறது.