• August 31, 2025
  • NewsEditor
  • 0

மறைந்த நடிகை ஶ்ரீதேவி – போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

2018ம் ஆண்டு `Dhadak’ திரைப்படம் மூலம் ஆரம்பித்தது இவரது பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களில் கமிட்டாகி பாலிவுட்டில் பிஸியாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜான்வி கபூர், சாதி குறித்து அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையேயான விவாதங்களையும், முரண்களையும் அறிந்துகொள்ளவதில் ஆர்வமிருப்பதாகவும், வரலாற்றை அறிந்து கொள்வதில் தனக்கு ஆர்வம் அதிகமிருப்பதாகவும் கூறியது பேசுபொருளாகியது.

ஜான்வி கபூர்

தற்போது ஜான்வி கபூர் நடித்திருக்கும் ‘param sundari’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்துப் பேசியிருக்கும் ஜான்வி கபூர், “எனக்கு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசையிருக்கிறது. அதற்குக் காரணம் 3 என்னோட லக்கி நம்பர். இரண்டாவது காரணம், இரண்டு குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள்.

மூன்றாவதாக ஒரு குழந்தை இருந்தால் அவர்களை சண்டைபோடாமால் பார்த்துக் கொள்ள உதவியாக இருக்கும். இரண்டு குழந்தைகளுக்கும் நடுவில் சமாதனம் பேசவும், இருவருக்கும் ஆதரவாக இருக்க அது உதவியாக இருக்கும். அதனால் மூன்று குழந்தைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நிறையமுறை எனக்குள் தோன்றியிருக்கிறது” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *