
நடிகர் ஆரி ஆர்ஜுனன், ‘கிம்ச்சி தோசா’ என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். சியர்ஸ் மியூசிக் என்ற நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது. இந்தோ -கொரியன் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள இந்த ஆல்பம், சமீபத்தில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. பாடலை இசையமைத்து நடித்தும் இருக்கிறார், இசையமைப்பாளர் தரண். அவருடன் கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் , தென்கொரிய ஏஏ பேண்டின் பாடகர் அவுரா, நடிகை சான்வி ஆகியோரும் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதுபற்றி சியர்ஸ் மியூசிக் நிறுவனர் அபிலஷா கூறும்போது, “இசைக் கலைஞர்களின் கனவுகளை நனவாக்க இசை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் பல புது இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம்” என்றார்.