• August 31, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவோர் தீபக் கணகராஜு, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் உடன் செல்ஃபி எடுத்ததாக ஒரு புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டார். முதலில் இது ஒரு சாதாரண சந்திப்பின் புகைப்படம் போல் தோன்றினாலும், அவரது பதிவு நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

போலி செய்திகள் எவ்வளவு எளிதில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை அந்த பதிவு தெளிவுபடுத்தியது. தீபக் அந்த போஸ்ட்டின் கேப்ஷனில் “எலான் மஸ்க் உடன் ஒரு சாதாரண சந்திப்பு.” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஏஐயின் உண்மையான ஆபத்து, ரோபோக்களால் மனிதர்களின் வேலைகள் பறிபோவது மட்டுமல்ல, போலி செய்திகள் எவ்வளவு எளிதாகப் பரவுகிறது என்பதை சார்ந்தும் தான் இருக்கிறது.

AI

ஏன் இந்த பதிவு கவனத்தை ஈர்த்தது?

இந்த சந்திப்பு உண்மையில் நடக்கவில்லை, புகைப்படம் முழுவதும் AI-ஆல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெங்களூருவில் இருந்து ஒருவர் எலான் மஸ்குடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்பதே மக்களிடம் கவனம் பெற்றது, அதன் உண்மைதன்மையை பலரும் அறியவில்லை.

போலி அனுபவங்களை உருவாக்கும் AI

AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் பிரபலமான நபர்களின் புகைப்படங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. முற்றிலும் கற்பனையான இடங்கள் மற்றும் நிகழ்வுகளை உண்மையானவை போல் காட்சியளிக்கச் செய்கிறது. இதனால் மக்கள் இல்லாத இடங்களையோ நிகழ்வுகளையோ நம்பி பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஜூலை மாதம், மலேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், சமூக வலைதளத்தில் ஒரு அழகிய கேபிள் கார் பயணத்தின் வீடியோவைப் பார்த்து, கோலாலம்பூரிலிருந்து பேராக் வரை 370 கி.மீ. பயணம் செய்தனர். ஆனால் அவர்கள் அந்த இடத்திற்கு சென்றபோது அந்த இடம் உண்மையில் இல்லை என்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் பார்த்து வியந்த வீடியோ AI-ஆல் உருவாக்கப்பட்டது. இப்படி பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு நமக்கு பல வசதிகளை வழங்கினாலும், போலி செய்திகளை எளிதில் உருவாக்கி பரப்புவதற்கு அதிக வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *