
ஜி.கே மூப்பனார் நினைவு நாளில், எடப்பாடியிடம் கூடுதல் அன்பை பகிர்ந்த அண்ணாமலை. அவருக்கு ஒரு சத்தியமும் செய்து தந்திருக்கிறார் என தகவல்.
கூட்டணிக் கட்சிகளை தக்க வைக்க எ.வ வேலுவிடமும், புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர கே.என் நேருவிடமும் இரண்டு அசைன்மெண்டுகள் கொடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின். அதற்கேற்ப தேமுதிகவுடன் பேசி வருகிறார் கே.என் நேரு.
இன்னொரு பக்கம் அதிக தொகுதிகளை எதிர்பார்த்து காங்கிரஸில் உருவாகி இருக்கும் புரட்சி படை. இதை எதிர்த்து போர்க்கொடி தூக்கும் திமுக. ஸ்டாலினுக்கு ஷாக்.
இதேபோல அதிமுகவில், புதிதாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட, ‘பவரை குறைக்க போகிறீர்களா பழனிசாமி?’ என கொதிக்கும் மா.செ-க்கள்.