
இன்று நடைபெற்ற யோலோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்வில், இயக்குநர் சாம், நடிகர் தேவ், நடிகை தேவிகா மற்றும் படக் குழுவினருடன் இயக்குநர்கள் ஏ.ஆர்.கே சரவணன், சதீஷ், சமுத்திரக்கனி, ஆர்.கே.செல்வமணி, அமீர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
‘பருத்தி வீரன் ஷூட்டிங்கில் மூக்கிலிருந்து ரத்தம் வந்தது’
நிகழ்ச்சியில் சமுத்திரக்கனி பேசியதாவது, “நானும் யோலோ பட இயக்குநரும் (சாம்) பருத்தி வீரன்ல அமீர் அண்ணன் கிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை பார்த்தோம். அவர் கிட்ட சாதாரண ஆட்கள் எல்லாம் வேலைபார்க்க முடியாது. அதிலும் நான் அவர் ரூம் மேட் போல அவருடனே இருந்தேன்.
அந்த படம் எடுத்த 150 நாள்கள் மிக அழகான பயணம். என்னுடைய குருநாதர் பாலசந்தர் சார், ‘நீ என்னிடம் இருந்தபோது சாஃப்டா இருந்த அமீர்கிட்ட வேலை செய்து விகரஸ் (தீவிர அணுகுமுறை) ஆகிட்ட, உன் காட்சிகள் எல்லாம் அதிக வன்முறையாக இருக்கிறது’ என்றார்.
அது உண்மைதான். அமீர் அண்ணனிடம் வேலைசெய்த பிறகுதான் நாடோடிகள் திரைப்படம் வேறுமாதிரி உருவானது.
YOLO என்ற டைட்டிலுக்கு அர்த்தம் கேட்டார் அமீர், ‘you live only once’என்றார் இயக்குநர் சாம். நாங்கள் பருத்திவீரன் பணியாற்றும்போது, வெப்பத்தில் என் மூக்கிலிருந்து இரத்தம் வந்துவிடும்.
அமீர் ‘உனக்கு என்ன ஜெயப்பிரதா மாதிரி ரத்தம் வருது’ என கிண்டல் செய்வார். ஆனால் சாம் சீரியஸாக ‘வாங்க ஹாஸ்பிடல் போய் பார்க்கலாம்’ எனக் கேட்பார்.
அவர் அமீரிடம் இருந்து வந்தபிறகு, எங்கள் படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். இந்த மேடை இவருக்கு மிக தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது. எனக்குத் தெரியாத நிறைய டெக்கினிக்கல் விஷயங்களை சாம்தான் கற்றுக்கொடுத்தது. இவர் திறனுக்கு எப்போதோ இயக்குநர் ஆகியிருக்க வேண்டும்.
இந்த படத்துக்கு உயிர் இருக்கு. கடுமையாக உழைத்திருக்கிறார்கள். தேவ் (நடிகர்) நல்லா வருவீங்க.”என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…