
விசாகப்பட்டினம்: ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூருவை இணைக்கும் புல்லட் ரயில் விரைவில் தொடங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் இன்று நடந்த இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "மிக விரைவில், தென்னிந்தியாவிற்கு புல்லட் ரயில் வர உள்ளது. இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களையும் இணைக்கும்.