
மதுரை: அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம், பாஜக வினரை தூண்டிவிட்டாலே போதும், பழனிசாமி உறுதியாக முதல்வராகி விடுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செப். 1 முதல் 4-ம் தேதி வரை மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம் மேற்கொள்வதையொட்டி மதுரை காளவாசலிலுள்ள மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மதுரை மண்ணுக்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு எண்ணற்ற திட்டங் களை தந்த முன்னாள் முதல்வர் பழனிசாமியை வர வேற்க மக்கள் எழுச்சியோடு உள்ளனர். இதனை அறிந்த திமுக காழ்ப்புணர்ச்சியோடு மதுரை மாநகராட்சியில் பிளக்ஸ் வைக்க கட்டணம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளரை முதல்வர் அரியணையில் ஏற்ற உயிரை கொடுக்க வேண்டாம். ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.