
பாட்னா: பிஹாரில் காங்கிரஸ், ஆர்ஜேடி இணைந்து நடத்தும் வாக்காளர் அதிகார யாத்திரையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் பங்கேற்றார். மேற்கு சம்பரன் மாவட்டத்தில் அவர் பேசும்போது மத்திய அரசுக்கு 3 கேள்விகளை முன்வைத்தார்.
“தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் நடைமுறையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது ஏன்? தேர்தல் நடைமுறைக்கு 45 நாட்களுக்கு பிறகு வாக்குச் சாவடி சிசிடிவி பதிவுகள் அழிக்கப்படும் என முடிவை எடுத்தது யார்?, காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர் பட்டியலை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட அதே நாளில் வாக்காளர் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் கடமைப்படவில்லை என்று விதி மாற்றப்பட்டது ஏன்? இதற்கான அறிவுறுத்தலை அளித்தது யார்?” என்று சச்சின் பைலட் கேள்வி எழுப்பியுள்ளார்.