• August 30, 2025
  • NewsEditor
  • 0

‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் வெற்றி வசந்த்.

அவருக்கும், ‘பொன்னி’ தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை வைஷ்ணவிக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Vetri Vasanth

தற்போது தன்னைப் பற்றியும், வெற்றி வசந்தைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக பரப்பப்படும் விஷயங்கள் தொடர்பாக, காட்டமாக பேசி ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார் வைஷ்ணவி.

அந்தப் பதிவில் அவர் கூறியதாவது:

“எதிர்மறையைப் பரப்பி அவதூறு செய்ய முயல்பவர்களே, தயவு செய்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களைத் தவிர, உங்கள் வெறுப்பு யாரையும் புண்படுத்தாது.

எதிர்மறைக் கருத்துகளைப் பதிவிட்டு ஒருவரின் பெயரை அவமதிப்பது உங்களை வலிமையானவராக காட்டாது. அது உங்கள் பொறாமையை மட்டுமே வெளிப்படுத்துகிறது. யாரையாவது கீழே இழுத்தால், நீங்கள் உயர்வீர்கள் என்று நினைத்தால், மீண்டும் யோசியுங்கள்.

மரியாதை செயல்களால் பெறப்படுகிறது, திரையில் வெறுப்பைப் பரப்புவதால் அல்ல. பேசுவதற்கு தைரியம் இருந்தால், நேரடியாக மரியாதையுடன் சொல்லுங்கள். இல்லையெனில், உங்கள் எல்லையில் இருங்கள்.

நான் உங்கள் டிராமாவைவிட அமைதியைத் தேர்வு செய்கிறேன். உங்களை நீங்களே கவனியுங்கள், ஏனெனில் உங்களின் நெகட்டிவிட்டி, ஏற்கெனவே வெற்றி பெற்றவரை ஒருபோதும் தடுக்க முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *