• August 30, 2025
  • NewsEditor
  • 0

“உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் விடப்பட்ட சம்பவத்துக்கு ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

எல்.முருகன், ஸ்டாலின்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

“திமுக அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

வைகை ஆற்றில் போடப்பட்ட மனுக்கள்

சிவகங்கையில், உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் போடப்பட்ட கொடுமை நடைபெற்றுள்ளது. மக்களின் வரி பணம் வீணாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பீகாரில் ஸ்டாலின்

சொந்த ஊரிலே விலை போகாத மாடு வெளி மாநிலத்திற்கு போய் உள்ளது. பீகாரில் என்ன பேச வேண்டும் என தெரியாமல் முதல்வர் பேசிக் கொண்டிருக்கிறார். ராகுல் காந்தியை ராஜீவ் காந்தி எனக் கூறுகிறார். மொத்தத்தில் முதல்வர் பயணம் தோல்வி.

எல்.முருகன்
எல்.முருகன்

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகம் இன்னும் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் போக வேண்டிய தூரம் அதிகம். ஒரு நிகழ்ச்சியை எப்படி வழிநடத்துவது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பற்றி விஜய் தெரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும். ஆர்எஸ்எஸ், பாஜக மக்களுக்கு எந்தளவிற்கு நல்லது செய்து வருகிறது என்பதை புரிந்து கொண்டு கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.”

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *