
உன்னாவ்: உத்தர பிரதேசம் உன்னாவ் மாவட்டம் அக்ரம்பூர் சுல்தான் கேரா கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ் பால் (45). இவர் கடந்த 2020-ம் ஆண்டு காணாமல் போனார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் சூரஜ் பால் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜம்மு காஷ்மீர் எல்லையை கடந்து பாகிஸ்தான் சென்றதாகவும், இதனால் அவர் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் சூரஜ் பாலின் உறவினர் ரமேஷுக்கு, இந்திய பாதுகாப்பு படையினர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தகவல் தெரிவித்தனர்.