
‘டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படத்தை எம்ஆர்பி என் டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஸயான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணை தயாரிப்பு செய்கிறார். இதில் அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் பூஜை சென்னையில் நடைபெற்றது. சசிகுமார், சிம்ரன், ஆர்ஜே பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.