
சென்னை: அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்குத் தொடர அனுமதியளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
அதிமுகவின் அடிப்படை விதிகளைத் திருத்தம் செய்ததை எதிர்த்தும், உள்கட்சி தேர்தலை எதிர்த்தும் அதிமுக தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்குத் தொடர அனுமதி கோரி வழக்கறிஞர் பா. ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.