• August 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடலில் மீன் பிடிக்க செல்லும்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்த வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்திய கடலோர பகுதிகளுக்கான பல் வகை ஆபத்து சேவைகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்று பேசியது: "மீனவர்கள் நலன் காக்க எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் 'மீனவ நண்பன்' என்ற ஸ்மார்ட் போன் செயலியை உருவாக்கி இருக்கிறோம். அதில் வானிலை நிலவரம், காற்று வீசும் திசை, வேகம், மீன்கள் அதிகமாக இருக்கும் இடங்கள் போன்ற தகவல்களை வழங்கி வருகிறோம். ராட்சத அலை, வெப்பநிலை தொடர்பாகவும் தகவல்களை வழங்க திட்டமிட்டிருக்கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *