
இந்த உலகில் ஏழு அதிசயங்கள் இருப்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், எட்டாவது அதிசயம் என்று இருக்கிறது. இந்த அதிசயத்தை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். இந்த அதிசயத்தைப் பற்றி நாம் தெரிந்துகொண்டால், நாம் மிகப் பெரிய அளவில் பணம் சேர்ப்பது உறுதி.
அந்த எட்டாவது உலக அதிசயம் என்ன என்று கேட்கிறீர்களா? அதுதான் பவர் ஆஃப் காம்பவுண்டிங் என்று சொல்கிறார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். தமிழில் சொன்னால், கூட்டு வட்டி வளர்ச்சி விகிதம்.
நம்முடைய முதலீட்டுக்கான லாபம் ஆண்டு தோறும் எந்த விகித அளவில் வளர்க்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு செய்வதுதான் புத்திசாலித்தனமான முதலீட்டுக்கு அடிப்படை.
இந்த எட்டாவது உலக அதிசயமான பவர் ஆஃப் காம்பவுண்டிங் எப்படிச் செயல்படுகிறது, அதை எப்படிப் பார்க்க வேண்டும், எந்த விதமான பவர் ஆஃப் காம்பவுண்டிங் இருந்தால், நாம் அதிகமான லாபத்தை அடைய முடியும் என்பதெல்லாம் தெரிந்தால், நாம் செய்யும் முதலீடு எதிர்காலத்தில் நமக்குப் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைக் கொடுப்பதாக இருக்கும்.
இந்த பவர் ஆஃப் காம்பவுண்டிங் பற்றி முதலீட்டாளர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக ‘லாபம்’ ஒரு ஆன்லைன் மீட்டிங் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 12.30 மணி நடத்தப் போகிறது.
இந்த ஆன்லைன் கூட்டத்தில் ‘பவர் ஆஃப் காம்பவுண்டிங்’கின் அற்புதங்கள் பற்றிப் பேசப் போகிறார் ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் ஏ.எம்.சி நிறுவனத்தின் தமிழ்நாடு புராடக்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆகாஷ் திலிப் ஜெயின்.

இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த லிங்கினை சொடுக்கி, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். அப்படிச் செய்துகொண்டால், இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்வதற்கான லிங்க் உங்கள் செல்போன் நம்பருக்கு அனுப்பப்படும்.
தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் அனைவரும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொண்டு பயன் பெறலாமே!