
சென்னை: பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சிகரமான செய்தியாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய பயனாளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எனவே, பொதுமக்கள் முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.