
முதுகு வலி உலகளவில் அதிக அளவில் மக்களை பாதிக்கும் ஒரு உடல்நலப் பிரச்னையாகும். இது எந்த வயதினரையும் பாதிக்கலாம். குறிப்பாக, வேலை செய்யும் வயதினர் மத்தியில் இது மிகவும் பொதுவானது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, கீழ் முதுகு வலி (Low Back Pain) உலகளாவிய அளவில் இயலாமைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
உலக மக்கள் தொகையில் சுமார் 80% பேர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது முதுகு வலியை அனுபவிக்கின்றனர்.
கழுத்து வலியும் உலகளவில் அதிகம் பேர் அனுபவிக்கும் உடல்நலப் பிரச்னைகளில் ஒன்றாகும். தவறான தோரணை, மன அழுத்தம் மற்றும் நீண்ட நேரம் திரை பார்ப்பது போன்றவை கழுத்து வலிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
மோசமான உடல் தோரணை (Posture): கணினி முன் அமரும்போது அல்லது ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது கழுத்தை குனிந்து பார்ப்பது, கூன் போட்டு நடப்பது அல்லது அமர்வது போன்ற தவறான தோரணைகள் முதுகு மற்றும் கழுத்து தசை, எலும்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை உண்டாக்குகின்றன.
உடல் உழைப்பின்மை: அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சியின்மை போன்றவை தசைகளை பலவீனப்படுத்தி, முதுகெலும்புக்கு ஆதரவு இல்லாமல் செய்கின்றன.
மன அழுத்தம் (Stress): மன அழுத்தத்தில் இருக்கும்போது தசைகள் இறுக்கமடைகின்றன. குறிப்பாக, கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகள் அதிகப்படியான இறுக்கத்திற்கு உள்ளாகும்போது வலி ஏற்படுகிறது.
உடல் பருமன் (Obesity): அதிக எடை, முதுகெலும்பின் மீது அதிக அழுத்தத்தை செலுத்துகிறது. இதனால், முதுகெலும்பு சிதைந்து, வலி உண்டாகிறது.
தவறான தூக்க நிலை: மிகவும் மென்மையான அல்லது கடினமான மெத்தைகள், தவறான தலையணை பயன்பாடு போன்றவை கழுத்து மற்றும் முதுகு தசைகளுக்கு போதுமான ஆதரவை வழங்காமல் வலியை ஏற்படுத்தும்.
கனமான பைகளை சுமப்பது: மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் அதிக எடை கொண்ட பைகளை ஒரே தோளில் சுமப்பது முதுகெலும்பை ஒருபக்கமாக வளைத்து வலியை உண்டாக்குகிறது.
புகைப்பிடித்தல்: புகைப்பிடிப்பதால் முதுகெலும்பு பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் குறைந்து, தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் தசைகள் பலவீனமடைகின்றன.
நோய்கள்: வாத நோய், எலும்பு முறிவு, தசைப்பிடிப்பு, நரம்பு கோளாறுகள், ஹெர்னியேட்டட் டிஸ்க் போன்ற சில மருத்துவ நிலைகளும் முதுகு மற்றும் கழுத்து வலிக்கு காரணமாக அமையும்.
ஆராய்ச்சிகளின்படி, பெரும்பாலும் 90% முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. சரியான ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை குணப்படுத்தலாம்.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தின் பங்கு
முதுகு மற்றும் கழுத்து வலியை நிவர்த்தி செய்வதில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகள் சிறப்பான பங்கு வகிக்கின்றன. இந்த பாரம்பரிய மருத்துவ முறைகள் நோயின் மூல காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துகின்றன.
முதுகுவலி சிகிச்சைக்கான சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு சந்தை வாய்ப்புகள்
1. சந்தையின் தற்போதைய நிலை மற்றும் வளர்ச்சி போக்குகள்
உலகளாவிய வளர்ச்சி: பூரணமாக வளர்ந்துவரும் ஒரு உலகளாவிய சந்தையாக, மாற்று மற்றும் துணை மருத்துவத்தின் (Complementary and Alternative Medicine – CAM) சந்தை, 2021-ல் $102 பில்லியனாக இருந்து, 2031-க்குள் $437.9 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 15.6% கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தை (CAGR) குறிக்கிறது. இந்த வளர்ச்சியில் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் அதிகரித்த தேவை: முதுகு மற்றும் தசைக்கூட்டு கோளாறுகள் (Musculoskeletal Disorders – MSDs) இந்தியாவில் ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே இது பரவலாகக் காணப்படுகிறது. வேலைப்பளு, தவறான உடல் தோரணை, மன அழுத்தம், உடல் உழைப்பின்மை போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள். இந்த நோய்களுக்கான சிகிச்சைக்காக, மக்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடுவதற்கான தேவை அதிகரித்துள்ளது.
வலி நிவாரண மாத்திரைகளின் நீண்டகால பயன்பாடு, குடல் சார்ந்த பிரச்சனைகள், அறுவை சிகிச்சையின் அதிக செலவு மற்றும் அதன் விளைவுகள் ஆகியவை, மக்களை ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகளை நோக்கி ஈர்க்கின்றன.
சந்தை வாய்ப்புகள் இருந்தாலும், சில சவால்களும் உள்ளன:
அங்கீகாரம் மற்றும் அறிவியல் சான்றுகள்: ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகளின் அறிவியல் பூர்வமான தன்மையை நிரூபிக்க கூடுதல் ஆய்வுகள் மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிமுறைகள் தேவை. இது இந்த மருத்துவ முறைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
சிகிச்சை முறைகளின் தர நிர்ணயம்: சிகிச்சை அளிக்கும் முறைகள் மற்றும் பயன்படுத்தப்படும் மூலிகைகளின் தரம் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். இது சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்தும்.
சுகாதார கொள்கைகள் மற்றும் காப்பீடு: பெரும்பாலான சுகாதார காப்பீட்டு திட்டங்கள் இன்னும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை. அரசின் கொள்கை மாற்றங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் ஆதரவு, இந்த மருத்துவ முறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

முதுகு மற்றும் கழுத்து வலி ஒரு உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், அதற்கு ஒரு நிரந்தர மற்றும் முழுமையான தீர்வை தேடும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகள், நோயின் மூல காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுடன், வாழ்க்கை முறை மாற்றங்களையும் பரிந்துரைப்பதன் மூலம் தனித்துவமான தீர்வுகளை வழங்குகின்றன. இந்த துறையில் உள்ள மருத்துவர்கள், மேலே கூறப்பட்ட சந்தை வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி, நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதன் மூலம் தங்கள் வளர்ச்சிக்கு வித்திடலாம். அரசின் ஆதரவு, அறிவியல் ஆய்வுகள் மற்றும் சரியான சந்தைப்படுத்தல் உத்திகளுடன், முதுகுவலி சிகிச்சைக்கான பாரம்பரிய மருத்துவ சந்தை எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை காணும் என்பதில் ஐயமில்லை.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் கடையநல்லூரை அடிப்படையாக வைத்துஆயுர்வேதத்தின் பாரம்பரிய அறிவை நவீன தொழில்நுட்பங்களுடன் இணைத்து ஒரு புதுத்தொழில் முனைவு நிறுவனமாக தனித்துவமான மருத்துவப் பயணத்தை தொடங்கியுள்ளது ‘அல் ஷிபா ஸ்பைன் ஆயுஷ் மருத்துவமனை’ (Alshifa Spine Ayush Hospital).
இந்த வளர்ச்சியைப் பற்றியும், அவர்களின் ‘ஸ்பைன் ஆயுஷ்’ (Spine Ayush) என்ற சிறப்பு மாதிரியைப் பற்றியும், நிறுவனத்தின் நிறுவனர்கள் டாக்டர். ஐ. ஜவாஹிரா பானு., BHMS., MD (நிர்வாக இயக்குநர்) – அல் ஷிஃபா ஆயுஷ் ஹெல்த்கேர் சென்டர் பிரைவேட் லிமிடெட், டாக்டர். அ. முகமது சலீம்., MD(ஆயு).,MBA(மருத்துவமனை மேலாண்மை) அளித்த பிரத்தியேக நேர்காணல் இங்கே…
“ஆயுர்வேதத்தில் எத்தனையோ துறைகள் இருக்கும்போது முதுகுவலிக்காக மட்டுமே உங்கள் ஸ்டார்ட்அப் இருக்கும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்? அதன் பின்னணியில் நீங்கள் செய்த ஆராய்ச்சி என்ன? எந்த காரணம் உங்களை உந்தியது?”
“எங்கள் மருத்துவமனை கடைய நல்லூரில் அமைந்துள்ளது, ஆயுர்வேத துறையில் எங்கள் குழுவினருக்கு 24 வருடங்களுக்கும் மேலான அனுபவம் இருக்கிறது, இந்த நீண்ட பயணத்தில், எங்கள் மருத்துவமனை தரவுகளை வைத்து நாங்கள் அறிந்ததில் ஒரு முக்கிய உண்மை எங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது – முதுகுவலி மற்றும் முதுகெலும்பு சம்பந்தப்பட்ட நோய்களே அதிகபட்ச நோயாளிகள் வந்திருக்கின்றனர்.
எங்கள் 24 வருட அனுபவத்தில் எங்கள் ‘அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில்’ இதுவரை 5 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு வெளிநோயாளி ஆலோசனைகள் (outpatient consultations), 20,000-க்கும் மேற்பட்ட உள்நோயாளி சிகிச்சைகள் (inpatient treatments) வழங்கப்பட்டுள்ளன.
இதில், 50,00க்கும் மேற்பட்டவர்களுக்கு முதுகு அறுவை சிகிச்சைகள் (unnecessary spine surgeries) தவிர்க்கப்பட்டுள்ளன. இந்த தரவுகளை தொகுத்தபின்னர்தான் நாங்கள் எங்கள் நிறுவனத்தை ‘அல் ஷிபா ஸ்பைன் ஆயுஷ் மருத்துவமனை’ எனப் பெயர் மாற்றி, ஒரு முழுமையான ஸ்பைன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மாடலாக (Spine Super-Specialty Model) வளர்த்துள்ளோம்.

ஆயுர்வேதத்தில் வர்மம் (Varmam), அக்னி கர்மா (Agnikarma) மற்றும் லேபம் (Lepam) போன்ற சிகிச்சை முறைகள் முதுகுவலிக்கு மிகவும் பயனுள்ளவை. நாங்கள் இதனை பிசியோதெரபி, யோகா, மற்றும் நவீன நோயறிதல் (modern diagnostics) போன்றவற்றுடன் இணைத்து ஒரு ஆதார அடிப்படையிலான (evidence-based) மற்றும் விரைவான நிவாரண (fast-relief) நெறிமுறையை உருவாக்கியுள்ளோம்.
முதுகுவலி ஒரு சாதாரண வலி அல்ல; அது ஒருவரின் வேலை திறன், உற்பத்தித்திறன் அனைத்தையும் பாதிக்கிறது. எனவே, இந்த ஒரு பிரிவில் மட்டும் கவனம் செலுத்துவது சமூக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். அதனாலேயே இப்பிரிவில் நாங்கள் கவனம் செலுத்தி எங்கள் புதுத்தொழில் முனைவை ஆரம்பித்தகிருக்கிறோம்.”
“ஆயுர்வேத சிகிச்சைகள் எந்த அளவுக்குத் தேவை இருக்கிறது?குறிப்பாக தமிழ்நாட்டில், இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய உங்கள் அல் ஷிபா ஸ்பைன் ஆயுஷ் மருத்துவமனை என்ன செய்கிறது?”
“தமிழ்நாட்டில் ஆயுர்வேத சிகிச்சைகளுக்கும் தயாரிப்புகளுக்கும் பெரிய தேவை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், வாழ்க்கை முறை நோய்கள் (lifestyle diseases) நாளுக்கு நாள் அதிகரிப்பதுதான். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் முதுகுவலி (back pain), கழுத்துவலி (neck pain), சர்க்கரை (diabetes), ரத்த அழுத்தம் (blood pressure) போன்ற பிரச்னைகள் 35 வயதிற்கு முன்னதாகவே வருகின்றன. இந்த சூழலில், காலம்காலமமாக நம்மிடைய இருந்த, பக்கவிளைவுகள் இல்லாத, நீண்ட கால நிவாரணம் தரக்கூடிய மருத்துவ முறைகள் மீது மக்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக போர்காலங்களில் கொடுக்கப்பட்ட வலி மேலாண்மைகளை நாங்கள் இங்கே பயன்படுத்துகின்றோம்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) தரவுகளின்படி, 80% மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது முதுகுவலியால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில், கொரோனா பெருந்தொற்றுக்குப் (post-Covid) பிறகு, உட்கார்ந்தே வேலை செய்யும் கலாசாரம் (sitting job culture) அதிகரித்ததால் முதுகு மற்றும் கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
நாங்கள், ‘அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை’ மற்றும் ‘ஸ்பைன் ஆயுஷ்’ மையங்கள் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய மூன்று வழிகளில் செயல்படுகின்றன:
சிறப்பு சிகிச்சை முறை (Specialty Treatment): முதுகெலும்பு, மூட்டு மற்றும் நரம்புப் பிரச்னைகளுக்கு ஆயுர்வேதம், யோகா மற்றும் பஞ்சகர்மா ஆகியவற்றை ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்கிறோம்.
தரமான தயாரிப்புகள் (Quality Products): எங்கள் சொந்த மருந்து தயாரிப்பு பிரிவில் WHO-GMP தரச்சான்றுடன் (certification) கூடிய மருந்துகள் மற்றும் ஆரோக்கியப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
அணுகுமுறை (Accessibility): தற்போது 5 கிளைகள் இயங்கி வருகின்றன. எதிர்காலத்தில் 150 கிளைகள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த சிகிச்சையைக் கொண்டு செல்லும் திட்டம் உள்ளது.
எங்கள் நோக்கம் வெறும் மருத்துவ சிகிச்சை அளிப்பது மட்டும் அல்ல; “ஆரோக்கியத்தை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றுவது” என்பதுதான்.”
“போட்டி நிறைந்த சந்தையில், உங்கள் அல் ஷிபா ஸ்பைன் ஆயுஷ் மருத்துவமனை ஆயுர்வேத ஸ்டார்ட்அப் எப்படித் தனித்து நிற்கிறது?”
“தமிழ்நாட்டில் பல மருத்துவ நிறுவனங்கள் இருந்தாலும், எங்கள் ‘ஸ்பைன் ஆயுஷ்’ என்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆயுர்வேத ஸ்பைன் வெல்னஸ் மாடல் (Super Specialty Ayurvedic Spine Wellness Model) சில தனித்துவமான பலங்களால் தனித்து நிற்கிறது.
நாங்கள் Niche Focus அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம். பல ஆயுர்வேத மையங்கள் பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சை அளித்தாலும், நாங்கள் முதுகெலும்பு & வலி மேலாண்மை (Spine & Pain Management)-க்கு மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இது, எங்களை ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மாடலாக மாற்றியுள்ளது.
எங்கள் சிகிச்சை முறை பாரம்பரியம் + நவீனத்தின் ஒருங்கிணைப்பு (Integration of Tradition and Modernity) ஆகும். ஆயுர்வேதத்தின் பழமையான போர்க்கள சிகிச்சை முறைகள் (War Medicine Techniques), நவீன பிசியோதெரபி (physiotherapy) மற்றும் யோகா ஆகியவற்றை இணைத்து, வலி மேலாண்மைக்காக ஒரு பன்முக சிகிச்சை முறையை (multi-dimensional treatment system) உருவாக்கியுள்ளோம். இதில் பஞ்சகர்மா (Panchakarma), வர்மம் (Varmam) போன்ற சிகிச்சைகளுடன், MRI மற்றும் ரத்தப் பரிசோதனை போன்ற நவீன நோயறிதல் கருவிகளையும் (modern diagnostics) பயன்படுத்துகிறோம்.

இதற்காக நாங்கள ஒரு (Ayush Integrated Pain Relief Protocol) செயல்முறையையே (புரோட்டாகால்) உருவாக்கி உள்ளோம். இந்த புரோட்டாகால்தான் எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதுமட்டும் அல்லாமல் இப்போது 10 கிளைகள் உள்ளது, ஆன்லைன் ஆலோசனை (online consultation), மற்றும் “வீட்டிலேயே செய்து பார்க்கக் கூடிய ஆயுர்வேத வழிமுறைகள்” (Do-It-Yourself Ayurveda) போன்ற புதுமையான திட்டங்கள் மூலம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு எங்களி்ன் சேவையை கொண்டு செல்ல இருக்கிறோம்.”
“ஆயுர்வேத சிகிச்சைகள் மெதுவாகச் செயல்படுகின்றன என்ற பொதுவான கருத்து உள்ளது. உங்கள் கிளினிக் நோயாளிகளுக்கு உடனடி மற்றும் நிரந்தர தீர்வு கிடைப்பதை எப்படி உறுதி செய்கிறது?”
“ஆயுர்வேதம் மெதுவாகச் செயல்படும்” என்ற கருத்து ஒரு தவறான புரிதல். எங்கள் அனுபவம் மற்றும் மருத்துவத் தரவுகள் (clinical evidence), ஆயுர்வேதம் உடனடி நிவாரணத்தையும் (fast relief) நீண்டகால குணப்படுத்துதலையும் (long-term cure) வழங்குகிறது என்பதைக் காட்டுகின்றன.
உடனடி நிவாரணம் (Immediate Relief): எங்கள் ‘ஆயுஷ் ஒருங்கிணைந்த வலி நிவாரண நெறிமுறை’ (Ayush Integrated Pain Relief Protocol) மூலம், நோயாளிகள் 3 முதல் 5 நாட்களுக்குள் வலி குறைவதைக் கண்கூடாக உணர்கிறார்கள். அக்னி கர்மா (Agni Karma) போன்ற நுட்பங்கள், மூட்டுவலி மற்றும் வீக்கத்திற்கு மிக வேகமான நிவாரணம் அளிக்கின்றன.
தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை (Personalised Protocols): ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்துவமான உடற்பயிற்சி (exercise), உணவு (diet) மற்றும் வாழ்க்கை முறைத் திட்டம் (lifestyle plan) வழங்கப்படுகிறது. இது நோயாளிக்கு உடனடி மற்றும் புலப்படும் பலன்களை (fast visible results) அளிக்கிறது.
நிரந்தரத் தீர்வு (Permanent Solution): உடனடி நிவாரணத்திற்குப் பிறகு, பஞ்சகர்மா (Panchakarma) மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம், நோயின் மூல காரணத்தை (root cause) நிர்வகித்து, நிரந்தரத் தீர்வை நோக்கிச் செல்கிறோம். இதனால், “ஆயுர்வேதம் மெதுவானது” என்ற கருத்து முறியடிக்கப்பட்டு, “உடனடி நிவாரணம் + விரைவான மீட்பு → நீண்டகால குணமடைதல்” என்ற நடைமுறை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
“அலோபதி மருத்துவத்தை நம்பும் மக்களிடம் ஆயுர்வேதத்தின் மீது எப்படி நம்பிக்கையை ஏற்படுத்துவீர்கள்?”
“நாங்கள் “அலோபதிக்கு மாற்றாக” (alternative) அல்ல, அதையும் “ஒருங்கிணைந்த ஆதரவு சிகிச்சை” (integrated supportive care) என்ற அணுகுமுறையில் செயல்படுகிறோம். நிச்சயம் அறுவை சிகிச்சை தேவை என்ற இடத்தில் நாங்கள் போலி வாக்குறுதிகளை வழங்குவதில்லை, அறுவை சிகிச்சை செய்யச்சொல்கிறோம், ஆனால் அதே சமயம் எங்கள் அனுபவத்திற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்பதை ஆராய்நத பிறகு நோயாளிக்கு, MRI மற்றும் ரத்தப் பரிசோதனை (blood test) போன்ற நவீன பரிசோதனை அறிக்கைகளையும் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கிறோம், அதற்குப் பிறகு கிடைக்கும் பலன்களையும் ஒப்பிட்டு விளக்குகிறோம். இது அவர்களுக்கு சிகிச்சை குறித்த தெளிவான புரிதலை அளிக்கிறது.
எங்களின் விரைவான நிவாரண சிகிச்சைகள் (fast relief therapies) மூலம், நோயாளிகள் 3 முதல் 7 நாட்களுக்குள் புலப்படும் பலன்களை (visible results) உணர்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் ஆயுர்வேதத்தின் மீது உடனடி நம்பிக்கை கொள்கிறார்கள். நீண்டகால சிகிச்சையால் பக்கவிளைவுகள் இல்லாத நன்மைகளை (long-term side-effect-free benefits) அவர்கள் உணரும்போது, இயற்கையாகவே நம்பிக்கை வலுப்பெறுகிறது.”
“ ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்தின் கீழ் நீங்கள் என்னென்ன உரிமங்கள் (licenses) மற்றும் சான்றிதழ்களை (certifications) பெற்றுள்ளீர்கள்? அரசு விதிமுறைகளுக்கு உங்கள் ஸ்டார்ட்அப் எப்படி இணங்குகிறது?”
“எங்கள் ஸ்டார்ட்அப் முழுமையாக அரசின் விதிமுறைகள் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் (AYUSH Ministry) வழிகாட்டுதல்களுக்கு இணங்க இயங்குகிறது.
உரிமங்கள் & சான்றிதழ்கள் (Licenses & Certifications): நான் NCISM மற்றும் தமிழ்நாடு மாநில ஆயுஷ் மருத்துவ கவுன்சில் (Tamil Nadu State AYUSH Medical Council)-இல் பதிவு பெற்ற மருத்துவர். எங்கள் மருத்துவமனைகள் தமிழ்நாடு அரசின் மருத்துவ நிறுவனங்கள் சட்டம் (Clinical Establishments Act – CEA)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மருந்து உற்பத்தி (Drug Manufacturing): எங்கள் மருந்து உற்பத்தி பிரிவு மாநில உரிம அதிகார அமைப்பு (State Licensing Authority)-இன் அங்கீகாரம் பெற்றதுடன், WHO-GMP (Good Manufacturing Practices) சான்றிதழும் பெற்றுள்ளது.
அரசு இணக்கம் (Government Compliance): ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 (Drugs & Cosmetics Act, 1940)-க்கு இணங்க செயல்படுகிறோம்.
“உங்கள் தயாரிப்புகளின் தரம் மற்றும் பாதுகாப்பை எப்படி உறுதி செய்கிறீர்கள்? ஆயுர்வேதத்தை அறிவியல் ரீதியாக சரிபார்க்க (scientifically validate) ஏதேனும் ஆராய்ச்சி செய்கிறீர்களா?”
“எங்கள் தயாரிப்புகளின் தரமும் பாதுகாப்பும் எங்களின் மிகப்பெரிய முன்னுரிமை.
தரக் கட்டுப்பாடு (Quality Control): எங்கள் மருந்து உற்பத்தி பிரிவு WHO-GMP மற்றும் ISO 9001:2015 தரச்சான்றுகளுடன் செயல்படுகிறது.
ஆராய்ச்சி மற்றும் அறிவியல் சரிபார்ப்பு (Research & Validation): கடந்த 24 ஆண்டுகளில், எங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 5,30,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் தரவுகளை (data) அடிப்படையாகக் கொண்டு, நாங்கள் மருத்துவ ஆராய்ச்சி (clinical research) செய்து வருகிறோம். இந்தத் தரவுகள், முதுகெலும்பு சிகிச்சைக்கான ஆயுர்வேத நெறிமுறைகளை அறிவியல் பூர்வமாக சரிபார்க்க (scientifically validate) உதவுகின்றன. எங்களின் நோக்கம், ஆயுர்வேத சிகிச்சை ஒரு ஆதார அடிப்படையிலான (evidence-based) மற்றும் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய (replicable) மாடல் என்பதை நிரூபிப்பதே.”
“அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் ஸ்டார்ட்அப் எங்கே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? புதிய கிளைகளைத் திறக்க திட்டங்கள் உள்ளதா?”
“எங்கள் நோக்கம், ஸ்பைன் ஆயுஷ் (Spine Ayush)-ஐ அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு உலகளாவிய முதுகெலும்பு-மையப்படுத்தப்பட்ட ஆயுர்வேத மாடலாக (spine-focused Ayurvedic model) வளர்த்திடுவதே. அதற்கான திட்டங்கள்:
விரிவாக்கம் (Expansion): அடுத்த 5 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட ஸ்பைன் ஆயுஷ் ஃப்ரான்சைஸ் கிளினிக்குகளை (franchise clinics) திறக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், முதுகெலும்பு நோய்களுக்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்ட 50 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் (Super-Specialty Hospital) உருவாக்கப்படுவேண்டும் என்று நாங்கள் அனுபவம் கொண்ட ஆயுர்வேத மருத்துவர்களை ஒருங்கிணிக்கிறோம்
வெளிநாட்டு நோயாளிகளை நாம் ஆயூர்வேதத்தை நோக்கி ஈர்க்கும் வகையில் மருத்துவ சுற்றுலா (medical tourism) திட்டங்கள், மற்றும் எலும்பு ஆரோக்கியம் தொடர்பான ஊட்டச்சத்துப் பொருட்கள் (nutraceuticals) அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், முதுகெலும்பு, ஆயுர்வேதம் மற்றும் பஞ்சகர்மா பற்றிய முழுமையான தகவல்களை ஒரே இடத்தில் வழங்கும் ஒரு டிஜிட்டல் தளத்தை (digital platform) உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
சுருக்கமாக, எங்கள் நோக்கம் ‘ஸ்பைன் ஆயுஷ்’-ஐ “முதுகெலும்பு-மையப்படுத்தப்பட்ட ஆயுர்வேதம், டிஜிட்டல் முதல் சிகிச்சை மற்றும் புத்துணர்ச்சி” (Spine-focused Ayurveda, Digital-first care & Rejuvenation)-யில் உலகளாவிய நிறுவனமாக மாற்றுவதுதான். இன்று வெல்நெஸ் கிளப் என்ற பெயரில் பல புதுமையான மையங்கள் அமைந்துவருகின்றன.
ஆனால் ஆயுர்வேத மருத்துவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு ஒரு ஆரோக்கியமான, முதுகுவலி சார்ந்த நோய்களை மேலாண்மை செய்ய சர்வதேச அளவில் ஒரு ஸ்டார்அப் நிறுவனமாக எங்கள் Alshifa Spine Ayush Hospital அல் ஷிபா ஸ்பைன் ஆயுஷ் மருத்துவமனை விளங்கவைக்கவேண்டும். எல்லா தரப்பு மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் மருத்துவமனையாக விளங்கவேண்டும் என்பதில் நாங்கள் மிகுந்தகவனம் கொள்கின்றோம்.
(சாகசம் தொடரும்)
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…