
தன்னுடைய உறுப்பு பெரிதாக இல்லை என்கிற எண்ணம் கிட்டத்தட்ட 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது.
இதில் சிலர் ஆணுறுப்பை மசாஜ் செய்து பெரிதாக்கி விடலாம் என்கிற நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மைதானா; இந்த முறை சரிதானா என சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் அவர்களிடம் கேட்டோம்.
”தன்னுறுப்பு சிறியதாக இருப்பதாக நம்புகிற பல ஆண்கள், இந்த மசாஜ் முறையை கையாளுகிறார்கள். இதை ஜெல்கிங் ( jelqing ) என்போம். இந்த முறையில், ஆணுறுப்பை இழுக்கக்கூடிய உபகரணங்களை பயன்படுத்துகிறார்கள். என்னைக் கேட்டால், இப்படி செய்யாதீர்கள் என்றுதான் சொல்வேன். தேவையில்லாமல் இழுத்து விடும்போது ஆணுறுப்புக்குள் வடுக்கள் ஏற்பட்டு பைரோனி போன்ற வியாதிகள் வரலாம். இதனால் ஆணுறுப்பு வளைந்து விடும்.
இன்னும் சிலர் ஜெல்கிங் செய்ததால், ‘எனக்கு விறைப்புத்தன்மை குறைந்துவிட்டது, ஆண்மைத்தன்மை குறைந்துவிட்டது’ என வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஆண்கள் தங்கள் உறுப்பைப்பற்றிய அதீத கவனம் எடுத்தால், அந்த உறுப்பில் பிரச்னை ஏற்படத்தான் அதிகம் வாய்ப்பிருக்கிறது.
தன் துணைக்கு முழுமையான திருப்தியை தர வேண்டும் என்பதற்காகத்தான், ஆண்கள் இப்படி அளவு தொடர்பான மன உளைச்சலில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் பெண்ணுறுப்பில் 2 முதல் 3 செ.மீ வரைதான் சென்சிட்டிவ் ஆக இருக்கும். இதைத்தாண்டி ஆழமாக போகும்போது, அங்கு சென்சிட்டிவிட்டி குறைவாகவே இருக்கும். அதனால், நீளமான ஆணுறுப்புதான் தாம்பத்திய வாழ்க்கைக்கு முக்கியம் என நினைத்துக்கொண்டு, ஏதோவொரு எண்ணெயைத் தடவி மசாஜ் செய்வது, உபகரணங்களை வைத்து இழுத்து மசாஜ் செய்வதெல்லாம் தேவையில்லாதவை” என்கிறார் டாக்டர் காமராஜ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…