
நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது.
அவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பலரும் விஷால் – சாய் தன்ஷிகா தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று விஷால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அப்போது, “சாய் தன்ஷிகாவுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துவிட்டது. அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் வந்துகொண்டே இருக்கிறது.
நடிகர் சங்கக் கட்டடத்தின் திறப்பு விழா இன்னும் இரண்டு மாதங்களில் கோலாகலமாக நடைபெறும்.
இன்றைக்குத்தான் திருமணம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் நடிகர் சங்கக் கட்டடத்தின் வேலைகள் முடியாத காரணத்தினால் தாமதமாகி இருக்கிறது.
கடவுளாப் பார்த்து அனுப்பிய என் வாழ்க்கை துணைவிதான் தன்ஷிகா. அவர் என்னுடைய தேவதை.

கூடிய விரைவில் திருமணம் நடக்கும். நடிகர் சங்க கட்டடத்தில்தான் எனது திருமணம் நடக்கும். அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…