
சிவகங்கை: திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மனுக்கள் மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்’ நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவைக்கு பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர். இந்த மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.