
டேராடூன்: உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் 8 பேர் மாயமானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டதால், பல வீடுகள் இடிபாடுகளுக்குள் சிக்கியது. வெள்ளத்தில் சிக்கி தேவாலின் மொபாட்டா பகுதியில், தாரா சிங் மற்றும் அவரது மனைவி என இருவர் காணாமல் போயினர். அதே நேரத்தில் விக்ரம் சிங் மற்றும் அவரது மனைவி காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அவர்களின் மாட்டுத் தொழுவமும் இடிந்து விழுந்து கிட்டத்தட்ட 15 முதல் 20 மாடுகள் சகதியில் புதைந்தன.