• August 29, 2025
  • NewsEditor
  • 0

நூல் வெளியீட்டு விழாவில் அருந்ததி ராய்

புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், “Mother Mary Comes to Me” என்ற தனது புதிய நினைவுப் புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இந்நூல் அவரது தாயார் மேரி ராய் உடனான சிக்கலான உறவு மற்றும் எழுத்தாளராக அவரது பயணத்தை ஆராய்கிறது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததி ராய்,
“நம் நாடு ‘தேச விரோதிகள்’ என்று அழைக்கும் பெரும்பகுதியினர் நாட்டு மக்களின்மீது அக்கறை கொண்டவர்கள்.

அதே நேரத்தில் தங்களை ‘தேசியவாதிகள்’ என்று காட்டிக் கொள்ளும் 99 சதவீதம் பேர் வரி ஏய்ப்பு செய்கிறார்கள்; தங்கள் குழந்தைகளை அமெரிக்காவிற்கு அனுப்புகிறார்கள்.

அருந்ததி ராய்

இந்த நாட்டில் நடக்கும் விஷயங்கள், அவர்களின் தனிப்பட்ட செல்வத்தையோ அல்லது அவர்களின் எந்த முட்டாள்தனத்தையோ பாதிக்காமல் இருக்க, அவர்கள் எல்லாவற்றையும் செய்கிறார்கள். இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

பெரும்பாலும் தங்கள் செல்வத்தைப் பாதுகாக்க மட்டுமே வேலை செய்கிறார்கள்.

இந்த புத்தகம், கேரளாவில் சிரிய கிறிஸ்தவ பெண்களுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாரிசுரிமை வழக்கை எதிர்த்து போராடிய பெண்கள் உரிமை ஆர்வலரான என் தாயார் மேரி ராய் உடனான உறவை மையமாகக் கொண்டது.

நான் ஏன் எழுதுகிறேன்? – அருந்ததி ராய்

2022-ம் ஆண்டு என் தாய் மேரி மறைந்ததற்குப் பிறகுதான் இந்த நினைவுக் குறிப்பை எழுதினேன்.
அவரின் மறைவு தூண்டிய நினைவுகளும் உணர்வுகளும் எழுச்சி பெற்று, இந்த நூல் உருவானது.

என் அம்மா உலகத்துடன் பகிர்ந்து கொள்ளத் தகுதியானவர் என்ற உணர்வு காரணமாகவே இந்தப் புத்தகத்தை எழுதினேன்.
என் எழுத்து எப்போதும், ஏதோ ஒன்றைப் பற்றிய அன்பும் அக்கறையும் கொண்ட இடத்திலிருந்தே பிறக்கிறது.

ஒருவர் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் ஏன் எழுதுகிறேன்? ஏனென்றால் அது என் அன்பின் வெளிப்பாடு.

அருந்ததி ராய்
அருந்ததி ராய்

மக்கள் மீதான அக்கறையிலிருந்துதான் என் எழுத்து வருகிறது. இல்லையெனில், நான் ஏன் கவலைப்பட வேண்டும்? ஏன் எழுத வேண்டும்?
எழுதுவதை விட அமைதியாக இருப்பது கடினமாகும்போதுதான் நான் எழுதுகிறேன்.

என்னை ஒரு ‘எழுத்தாளர்’ அல்லது ‘ஆர்வலர்’ என்று கருதுவதில்லை. அது எனக்கு அபத்தமான ஒன்றாகவே தோன்றுகிறது; சோபா-பெட் போல சிக்கலான சொல்லாக.

கால வரலாற்றில் மிகவும் ஆபத்தான இடம் எழுத்து. அது ஒரு பாதுகாப்பான இடம் என்ற மாயை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.

அதனால், நான் இங்கே நன்றாகவே இருக்கிறேன். என் தாயின் கரடுமுரடான தன்மையே எனக்கு உறுதியையும் தைரியத்தையும் தந்தது.” எனப் பேசினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *