
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்துவிட்டார்.
38 வயதாகும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 187 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்ற போது அஷ்வின் அணியில் இடம் பெற்றிருந்தார்.
ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அஷ்வின் ஒவ்வொரு முடிவுக்கும் புதிய தொடக்கம் இருக்கும் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஓய்வை அறிவித்த அஷ்வின் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பதிவிட்டிருக்கிறார்.

அதில், ” OG CSK-வுக்காக நீங்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்ததில் இருந்து, மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து ஒன்றாக விளையாடியது வரை… உங்களுடன் Dressing Room-ஐ பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது Ash அண்ணா! அனைத்துக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…