• August 29, 2025
  • NewsEditor
  • 0

இயக்குநர் லிங்குசாமியின் ‘பெயரிடப்படாத ஆறுகள்’ என்ற புதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பை இன்று, முனைவர் கு. ஞானசம்பந்தன் தலைமையில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார். வெளியிடப்பட்ட நூலை நடிகை அபிராமி பெற்றுக்கொண்டார்.

`என்னை சிரிக்க வைக்கும் ஒருவர் லிங்குசாமி’

மேடையில் பேசத் தொடங்கிய இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், “லிங்குசாமி என்னோட நெருங்கிய நண்பர். நான் அவரின் அனைத்தும் விஷயங்களையும் ரசிப்பேன் என்று அவருக்குத் தெரியும்.

அதற்காகதான் இந்தப் புத்தகத்தை இன்று நான் வெளியிட்டிருக்கிறேன். நாங்கள் இருவரும் நிறைய விஷயங்களைப் பற்றி பேசுவோம். என்னை சிரிக்க வைக்கும் ஒருவர் லிங்குசாமி.

என்னுடைய ஒரு வெளிவராத படத்தின் மேல் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார். அதற்காக நிறைய உதவிகளையும் அவர் செய்திருக்கிறார்.” என்றவர், புத்தகத்தில் தனக்குப் பிடித்த வரிகளை மேடையில் வாசித்தார்.

அவர், “‘தீக்குச்சியை உரசிய அதே கணத்தில் வானில் மின்னல்.’ எனக்கு ‘ரன்’ திரைப்படம் பார்த்த உணர்வை இந்தக் கவிதை கொடுத்தது. இந்த வரி எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

இதை ஒரு கதையாக எழுதி என் அடுத்த படத்தில் ஒரு காட்சியாக இதை எடுக்க வேண்டும் என எனக்கு ஆசை. எதற்கு என்னைக் கூப்பிட்டு இந்த நூலை வெளியிடச் சொன்னார்? இந்த வட்டத்தில் நிறைய பேர் இருக்கிறாரே என நான் சொல்லமாட்டேன்.

கெளதம் வாசுதேவ் மேனன்
கெளதம் வாசுதேவ் மேனன்

அவர் என்னுடைய நண்பர், நான்தான் இதை வெளியிட வேண்டும். நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்று என் நண்பனுக்குத் தெரியும். உங்களின் கவலை மறக்க கவிதை பாடுபவன் என் நண்பன் என்பதும் எனக்குத் தெரியும்.

லிங்குசாமியின் பேச்சில் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்கும். பஞ்ச் லைன் சொல்லி என்னைச் சிரிக்க வைப்பார். என்னுடைய நலனில் மிகுந்த அக்கறைக் கொண்டவர் லிங்குசாமி.

என்னுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் இதில் சில கவிதைகள் இருந்தன. உதாரணத்திற்கு, ‘சிறிய வட்டம் நிலா, பெரிய வட்டம் வானம், கிணற்றுத் தவளைக்கு…’ என இதில் ஒரு கவிதை இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் நிகழும் ஒரு விஷயமாக நான் இதைப் பார்க்கிறேன். இதில் கிணற்றுத் தவளை நான்தான்.” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *