• August 29, 2025
  • NewsEditor
  • 0

அமராவதி: அமராவ​தி​யில் உள்ள தலைமை செயல​கத்​தில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் வேளாண் துறை அதி​காரி​களின் ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: விவ​சா​யிகளிட​மிருந்து குவிண்​டால் வெங்​கா​யத்தை ரூ.1,200-க்கு வாங்கி அதனை அந்​தந்த மாவட்ட சமூக நலத்​துறைக்கு சொந்​த​மான இடங்​களில் உலர வைக்க வேண்​டும்.

அதன் பின்​னர் உழவர் சந்​தைகள் மூலம் பொது​மக்​களுக்கு விற்​பனை செய்ய நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். இதனால் விவ​சா​யிகளும் நஷ்டமடைய மாட்​டார்​கள். பொது​மக்​களும் அதிக விலை கொடுத்து வெங்​கா​யத்தை வாங்​கும் நிலை ஏற்​ப​டாது. கள்ள சந்தை விற்​பனை முற்​றி​லு​மாக தடுக்​கப்​படும். இவ்​வாறு சந்​திர​பாபு நாயுடு தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *