
புதுடெல்லி: வர்த்தக வரி தொடர்பாக பேச அமெரிக்க அதிபர் 4 முறை தொலைபேசியில் அழைத்தும் பிரதமர் மோடி பேச மறுத்ததாக ஜெர்மனி, ஜப்பான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுஉள்ளன.
உலக நாடுகளுக்கு அதிக வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார். அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை ட்ரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.