• August 29, 2025
  • NewsEditor
  • 0

ஈரோடு: அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு பாஜக தேசிய செயற் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கூறினார்.

இந்து முன்​னணி சார்​பில் ஈரோடு மாவட்​டம் கோபி​யில் நடை​பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா​வில் பங்​கேற்ற ஹெச்​.​ராஜா,பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வுக்கு எதி​ராக அமெரிக்கா 50 சதவீதம் வரி​வி​தித்​துள்​ளது. இதனால், முன்​னாள் பிரதமர் மன்​மோகன்​சிங் காலத்​தில் கொண்​டு​வரபட்ட ‘காட்’ உடன்​படிக்கை தோற்​றுப்போயுள்​ளது. நாட்டு மக்​கள் சுதேசி உற்​பத்​திப் பொருட்​களை வாங்க வேண்​டும். அமெரிக்க பொருட்​களை ஆன்​லைன் மூலம் வாங்க மாட்​டோம் என்று அனைவரும் முடி​வெடுக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *