• August 29, 2025
  • NewsEditor
  • 0

மதுரை / பெரம்பலூர்: தவெக மாநாட்​டில் இளைஞர் தூக்கி வீசப்​பட்ட விவ​காரத்​தில் கட்​சித் தலை​வர் விஜய் மற்​றும் 10 பவுன்சர்கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை​யைத் தொடங்​கினர்.

மதுரை மாவட்​டம் பாரப்​பத்​தி​யில் தவெக 2-வது மாநில மாநாடு கடந்த 21-ல் நடந்​தது. இதில் லட்​சக்​கணக்​கான தொண்​டர்​கள், நிர்​வாகி​கள் பங்​கேற்​றனர். தொண்​டர்​கள், ரசிகர்​களை விஜய் சந்​திக்​கும் வகை​யில் மேடையி​லிருந்து 800 மீட்​டர் நீளத்​தில் ‘ரேம்ப் வாக்’ அமைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், அரு​கில் சென்று விஜயை பார்க்க முயன்ற பெரம்​பலூர் மாவட்​டம் பெரி​யம்​மா​பாளை​யம் கிராமத்​தைச் சேர்ந்த சரத்​கு​மார் என்​பவரை பவுன்​சர்​கள் குண்​டுக்​கட்​டாக தூக்கி கீழே வீசி​ய​தாக​வும், அவர் ‘ரேம்ப் வாக்’ பக்​க​வாட்டு கம்​பியைபிடித்​துத் தொங்கி உயிர் தப்​பிய​தாக​வும் புகார்​கள் எழுந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *