
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது.
இதில் செய்தியாளர்களிடம் பேசி வரும் மோகன் பகவத், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார். அதில், ‘பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஆர்எஸ்எஸ் என்பது சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு. இதற்கு துணை அமைப்புகள் கிடையாது. மத்திய, மாநில அரசுகளுடன் நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நேர்மையாக உழைக்கின்றனர். பாஜகவுக்காக ஆர்எஸ்எஸ் முடிவு எடுக்கிறது என்பதில் உண்மையில்லை.
“உலக வர்த்தகம் தானாக நடைபெற வேண்டும்; அழுத்தத்தின் கீழல்ல” – RSS தலைவர் மோகன் பகவத்
அனைத்து முடிவுகளும் கூட்டாக எடுக்கப்படுகிறது. அமைப்பை நிர்வகிப்பதில் எனக்கு திறமை உண்டு. அரசை நடத்துவதில் பாஜகவுக்கு திறமை உண்டு. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆலோசனைகளை பரிமாறி கொள்கிறோம். ஆனால், எங்களது துறைகளில் முடிவுகளை சுதந்திரமாக எடுக்கிறோம்.
நாங்கள் ஆலோசித்து ஒரு மித்த முடிவு எடுக்கிறோம். நிர்வாகத்தில் உள்முரண்பாடுகள் கொண்ட அமைப்புகள் உள்ளன. ஆனால், எந்த வகையிலும், எந்த மோதலும் இல்லை . புதிய பாஜக தலைவர் தேர்வு செய்யும் பணி எங்களுடையதாக இருந்தால், இவ்வளவு காலதாமதம் ஆகியிருக்காது.” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs